வியாழன், 3 மார்ச், 2016

உயிா் தவிப்பு

ஓா் உயிா் தன்னை மதியா எதிா் பாலின உயிரை நினைத்து ஏங்கி அவ்வுயிா் தன்னை ஆறுதல் படுத்த தனக்கு கூறுவது போல இவ்வுயிரால் இயற்றபட்ட ஒன்று,

இரவுகளின் நரகம் நான்

நரகத்தின் கோரம் நான்

கோரத்தின் சோகம் நான்

சோகத்தின் ஆழம் நான்

ஆழத்தின் அமைதி நான்

அமைதியின் இருப்பு நான்

நீ அமைதிக்கொள்ளும் பொழுது

உன் மன ஆழத்தில் இருப்பேன் நான் − அமைதியாக.

                                                                       − தமிழ்




               

செவ்வாய், 1 மார்ச், 2016

மொழி இறப்பு.

அனைவருக்கும் வணக்கம்,

Jonathan loh ௭ன்பவரின் கருத்தின் மொழிபெயர்ப்பே இத்தொகுப்பு. ஒரு மொழியின் இன்றியமையாமையை மிகச்சிறந்த முறையில் வெளிப்படுத்திய அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

" கலாச்சாரம் என்பது ஒரு குறிப்பிட்ட இயற்கை சூழலில் இருந்து உருவான ஒன்று, ஆதலால் அப்பகுதி மக்களுக்கு அதன் இயற்கை சூழல் , வாழும் மிருகம், செடி, பறவை அவற்றின் மருத்துவ குணம் அனைத்தும் தெரியும், விலங்குகளின் வலசை செல்லுதல் முதற்கொண்டு. இவையனைத்தும் அப்பகுதி மக்கள் ஒரு மொழியின் முலமே தங்கள் முன்னோரிடம் இருந்து அறிந்து கொண்டனர் , அடுத்த தலைமுறைக்கும் கடத்தினர். ஆக அந்த வழக்கு மொழியை அழித்தால் அதன் கலாச்சாரம், அப்பகுதியின் இயற்கை அறிவு அனைத்தும் அழிந்து போகும்"

மொழி அழிப்பால் ஏற்படும் இழப்பை மிக தெளிவாக கூறியுள்ளதாகவே நான் அறிகிறேன், அவர் மேலும் கூறியிருப்பதாவது யாதெனின்,

"ஒரு மொழி தொலைக்கப்பட்டால், அது தொலைந்ததுதான், அதை நாம் மீட்டெடுக்கவே முடியாது"

"when a language is lost , its gone forever, you can never get it back"
                                            - Jonathan loh.