வியாழன், 3 மார்ச், 2016

உயிா் தவிப்பு

ஓா் உயிா் தன்னை மதியா எதிா் பாலின உயிரை நினைத்து ஏங்கி அவ்வுயிா் தன்னை ஆறுதல் படுத்த தனக்கு கூறுவது போல இவ்வுயிரால் இயற்றபட்ட ஒன்று,

இரவுகளின் நரகம் நான்

நரகத்தின் கோரம் நான்

கோரத்தின் சோகம் நான்

சோகத்தின் ஆழம் நான்

ஆழத்தின் அமைதி நான்

அமைதியின் இருப்பு நான்

நீ அமைதிக்கொள்ளும் பொழுது

உன் மன ஆழத்தில் இருப்பேன் நான் − அமைதியாக.

                                                                       − தமிழ்




               

செவ்வாய், 1 மார்ச், 2016

மொழி இறப்பு.

அனைவருக்கும் வணக்கம்,

Jonathan loh ௭ன்பவரின் கருத்தின் மொழிபெயர்ப்பே இத்தொகுப்பு. ஒரு மொழியின் இன்றியமையாமையை மிகச்சிறந்த முறையில் வெளிப்படுத்திய அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

" கலாச்சாரம் என்பது ஒரு குறிப்பிட்ட இயற்கை சூழலில் இருந்து உருவான ஒன்று, ஆதலால் அப்பகுதி மக்களுக்கு அதன் இயற்கை சூழல் , வாழும் மிருகம், செடி, பறவை அவற்றின் மருத்துவ குணம் அனைத்தும் தெரியும், விலங்குகளின் வலசை செல்லுதல் முதற்கொண்டு. இவையனைத்தும் அப்பகுதி மக்கள் ஒரு மொழியின் முலமே தங்கள் முன்னோரிடம் இருந்து அறிந்து கொண்டனர் , அடுத்த தலைமுறைக்கும் கடத்தினர். ஆக அந்த வழக்கு மொழியை அழித்தால் அதன் கலாச்சாரம், அப்பகுதியின் இயற்கை அறிவு அனைத்தும் அழிந்து போகும்"

மொழி அழிப்பால் ஏற்படும் இழப்பை மிக தெளிவாக கூறியுள்ளதாகவே நான் அறிகிறேன், அவர் மேலும் கூறியிருப்பதாவது யாதெனின்,

"ஒரு மொழி தொலைக்கப்பட்டால், அது தொலைந்ததுதான், அதை நாம் மீட்டெடுக்கவே முடியாது"

"when a language is lost , its gone forever, you can never get it back"
                                            - Jonathan loh.

திங்கள், 29 பிப்ரவரி, 2016

சுதந்திரம் எனது பிறப்புரிமை

சுதந்திரம் எனது பிறப்புரிமை

நமது நாட்டில் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் சுதந்திரமாக நடமாடும் தைரியம் எத்தனை பேருக்கு இருக்கிறது ?

      இந்த கேள்விக்கு பதில் அறிந்துக்கொள்ள எனக்கு எந்த விதத்திலும் விருப்பம் இல்லை, அது மிக சொற்பம் தான் என்பது வருதத்திர்க்குரியதாக இருந்தாலும், இது இயல்பு என்று ஏற்றுக்கொள்ளும் மன பக்குவத்திற்கு நாம் வந்து விட்டோம்..

நள்ளிரவு 2மனிக்கு மவுண்ட் ரோட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே அமர்ந்து காற்று வாங்க, ECR ரோட்டில் TENT போட்டு விளக்கு வெளிச்சத்தில் இரவு உறங்க, இது போன்ற எண்ணற்ற ஆசைகள் நமது மனதில் புதைந்து கிடந்தாலும் அதை செய்யத்த்தான் எத்தனை தயக்கம்

இரவு முழுவதும் கடற்கரையில் நட்சத்திரத்தை பார்த்துக்கொண்டே அமர்ந்து இருக்க யாருக்குத்தான் ஆசை இல்லை, ஆனால் 11 மணிக்குமேல் நமக்கு அங்கே அமரக்கூட அனுமதி இல்லை.

   “இதை முயற்சித்தால் எத்தனை தடைகள், எத்தனை கேள்விகள்”.

நமது அரசியல் சாசனத்தில் முதல் பக்கத்திலேயே குருப்பிட்டுள்ள நம்முடைய உரிமைகள், பறிக்கப்பட்டுள்ளது என்பதை விட, அது நமக்கு அறிவிக்ககூடபடவில்லை என்பது வருத்திர்க்குரியது....

 JUSTICE ( நீதி), LIBERTY (சுதந்திரம்), EQUALITY ( அனைவரும் சமம் ) FRATERNITY (சகோதரத்துவம்)
 
இவை நம் நாட்டில் வாழும் அனைவருக்கும் சமம், இதை அனைவருக்கும் தரவேண்டியது நமது ஜனநாயகத்தின் கடமை என்று எழுதப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் நாம் உணருகின்றோமா இது அனைத்து, பிரஜைகளுக்கும் சமமாக இருக்கின்றதா, இல்லை என்பதே உண்மையான பதில்.

சிக்னலில் பச்சை போட்டால் போ, மஞ்சள் போட்டால் வேகமாக போ, ரெட் போட்டால் போலீஸ்காரன் இருக்கின்றானா என்று பார்த்து போ, என்று அர்த்தம் எழுதி வைத்திருக்கும் நாம், கைபேசியில் பேசிக்கொண்டே வண்டி ஒட்டிக்கொண்டு தைரியமாக செல்லும் நாம், மாட்டினாலும் 50 ரூபாயில் தப்பிக்கும் நமக்கு, எது நீதி என்று பிரித்து பார்க்க நேரமில்லை...

நமது ஜனநாயகத்தின் மிக பெரிய உரிமை, கருத்து சுதந்திரம், சமுகவளைதலத்தில் நமது கருத்தை வெளியிட கூட யோசிக்க வைத்த 2 பெண்களின் கைது, கேலிச்சித்திரம் வரைந்த வடநாட்டு விமர்சகரின் நிலைமை - இவை அனைத்தையும் கண்டப்பின், நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம் என்பதில் எனக்கு எந்த பெருமையும் இல்லை...

கல்வியில் STATE BOARD, CBSE, ICSE, METRICULATION, என்று இத்தனை வகை, ஒன்றை விட ஒன்றின் தரம் அதிகம், பணம் கொடுத்தால் தரம் உண்டு என்பதை பார்த்து வளர்ந்த நான், அனைவரும் சமம் என்பதை கருத்தளவில் கூட ஏற்றுக்கொள்ளப்போவதில்லை..

அடிமைத்தனம் அழியவில்லை, நமது தொழிற்பேட்டைகளில் 5000 ருபாய் சம்பளத்திர்ற்கு 12 மணிநேரம் உழைத்துகொட்டும் நமது சகோதரர்களிடம் நவீனமாக ஒலித்திருக்கிறது, என்பதை உணரும் பகுத்தறிவு வந்தபின் சகோதரத்துவம் எங்கே போனது என்ற கேள்விகள் மட்டுமே மிஞ்சியது......

எனக்காக என் அரசியல் சாசனத்தில் இத்தனை சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்த நான் சற்று நேரம் வருத்தத்தில் ஆழ்ந்தது எனக்கு எந்த விதத்திலும் அதிர்ச்சி அளிக்கவில்லை
           காரணம் "எனது உரிமைகளை என்னால் படிக்கத்தான் முடிந்தது உணர முடியவில்லை"

கிட்டத்தட்ட பல நுற்றாண்டுகளுக்கு முன்னரே "யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற நமது எழுத்து வடிவம், நமது பகுத்தறிவு எவ்வளவு வலுவானது, எவ்வளவு உன்னதமானது என்பதை உணர்த்தியது..

இந்த பகுத்தறிவே, “எனது உரிமைகள், எனக்குரியது” என்ற என்னத்தை எனக்குள் வலுவாக புதைத்தது..

இலஞ்சத்தினால் வேலைகளை எளிதாக முடிக்கலாம் என்ற போலியான உரிமைகளை என்னிடம் கொடுத்து, எனது உண்மையான உரிமைகளை பறிக்கும் திட்டம், இனிமேல் நிறைவேரபோவதில்லை.

இனி உரிமைகள் பறிக்கப்படும் இடத்திலும், போலி உரிமைகள் கொடுக்கப்படும் இடத்திலும் கேள்விகள் எழும், இந்த கேள்விகள் நமக்கு உரிமைகளை பெற்றுத்தரும் என்ற எண்ணம் நமக்கு ஆணிவேர் ஆகட்டும்............
                  வாழ்க்கை வாழ்வதற்கே !

Patti sutta vadai

Oru oorla oru pati vada suttutu irundhangalam. Apa anga oru kaka vanthycham, atha kaka oru vadaya thiruditu poiducham. Vadaya thookitu pona kaka oru marathumela okanthu epdi sapdrathunu yosichitu irundhucham. Atha antha valiya vantha nari pathucham. Nariku odene vada thingara aasa vandhuduchu. Odane antha nari kakava pathu 'aye kaka nee paka romba alaga iruka un kuralum nalla thana irukum, oru pattu padu' apdinu sonnucha. Atha nambi kakavum vaya thoranthu 'ka ka ka kaka ka ka' apdinu paduchan. Apa antha kaka vayila irundhu keela viluntha vadaiya nari thookitu odichan. Andha kaka pavam sogama innoru vadaya thiruda poiduchu